ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மகளிர் தினமான இன்று (08) அனைத்து பெண் குழுவினரால் இயக்கப்படும் விமானத்தின் மூலம் விமான சேவையில் பெண்களின் சக்தியைக் கொண்டாடியது.
இன்று காலை இந்தியாவின் திருச்சிக்கு யுஎல் 131 எனும் குறித்த விமானம் புறப்பட்டதாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கப்டன் ஷாமிக்க ரூபசிங்க, முதல் அதிகாரி பிமலி ஜீவந்தரா; பர்சர் ரோஷனி திஸாநாயக்க; கெபின் மேற்பார்வையாளர் உபுலி வர்ணகுல மற்றும் விமானப் பணிப்பெண்கள் லக்மினி திசாநாயக்க, ஜெயகலனி கின்சன் மற்றும் ஹர்ஷி வல்பொல கங்கனமலகே ஆகிய பெண் அதிகாரிகள் பணியாற்றினர்.