மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் பெண் ஒருவர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (26.03.2023) மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாவியில் பெண் ஒருவர் சடலமாக நீரில் மிதப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
துணுக்காய்
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் நேற்று(25.03.2023) ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதி ஓராமாக விழுந்து காணப்பட்ட நிலையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் முதியவர் வீதி ஓரமாக தூக்கி வீசப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பனங்காமம் பகுதியை சேர்ந்த 49 வயதான செல்வராசா ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியால் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதி விட்டு தப்பி சென்ற வாகனம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.