எரிபொருள் அட்டையின் QR ஒதுக்கீடு - இன்று முதல் புதிய நடைமுறை



தேசிய எரிபொருள் அட்டையின் QR ஒதுக்கீடு வாரந்தோறும், ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


இந்த புதிய நடைமுறையான வாராந்த புதுப்பிப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று காலை அனைத்து கணக்குகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் எரிபொருள் ஒதுக்கீடு மாற்றப்படாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை