மட்டக்களப்பில் - உர விநியோகம் ஏப்ரல் 10ம் திகதியுடன் இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்கு இலவமாக வழங்கப்படும் ரிஎஸ்பி உரத்தினை, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளில் 40 வீதமானோரே பெற்றுக்கொண்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ம் திகதியுடன் இவ் இலவச உர விநியோகம் நிறுத்தப்படவுள்ள நிலையில், இதுவரை உரத்தைப் பெற்றுக்கொள்ளதாக ஏனைய விவசாயிகள் விரைவாக உரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தோடு இலவச டீசல் விநியோகத்திற்கான காலம் நிறைவடைந்த போதும், மாவட்ட விவசாயிகளின் நன்மைகருதி, எதிர்வரும் 14ம் திகதி வரை இலவச டீசல் விநியோகம் இடம்பெறும் என்றும், இலவச டீசலையும் 50 வீதமானவர்களே இதுவரை பெற்றுக்கொண்டுள்ளதாக வும் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை