மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் - இரத்தத்திற்குத் தட்டுப்பாடு!



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கியில் இரத்தத்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதால்குருதிக் கொடையாளிகள் விரைந்து வந்து இரத்ததானம் செய்யுமாறு அவ்வைத்தியாலை இரத்த வங்கிப் பிரிவின் வைத்திய அதிகாரி கீர்த்திகா மதனழகன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை 04.04.2023 இரவு இந்தவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வேண்டுகோளில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் இரத்த வங்கியில் எல்லாவகையான இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, உயிர் காக்கும் உன்ன சேவையினைமேற்கொள்ள குருதிக் கொடையாளர்களின் மகத்தானகொடை தேவைப்படுகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்த தானம் செய்ய உத்தேசித்துள்ளவர்கள்உடனடியாக வந்து உதவுமாறு அந்த வேண்டுகோளில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை