தியாகதீபம் அன்னை பூபதியின் 35 ஆவது நினைவு தினம் பொதுக் கட்டமைப்பின் கீழ் நடைபெறும்தியாகதீபம் அன்னை பூபதியின் 35 ஆவது நினைவு தினம் பொதுக் கட்டமைப்பின் கீழ் நடைபெறும் என ஏற்பாட்டுக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்துள்ளனர்.

எதிர் வருகின்ற 19ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

இந்த நிகழ்வானது கடந்த காலங்களில் ஒழுங்கில்லாமல் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வசதிக்கு ஏற்ற நேரத்திலே, தியாக தீபத்தின் தியாகச்சுடர் ஏற்றப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டது.

ஆனால், இம்முறை அதன்படி இல்லாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பெரியவர்களை கொண்டு கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


அந்தக் கட்டமைப்பின் கோட்பாட்டிற்கு அமைவாக இந்த நிகழ்வானது எதிர் வருகின்ற 19ஆம் திகதி நடைபெற இருக்கின்றது என ஏற்பாட்டுக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை