இலங்கையின் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!இலங்கையின் 8 மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான வானிலை தொடரும் என அறிவிக்கப்பட்டள்ளது.

அநுராதபுரம், குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, வவுனியா, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பத்திற்கு சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளே பிரதான காரணம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இந்த ஆண்டு மே மாதம் நடுப்பகுதி வரை வெப்பம் தொடரலாம்.
புதியது பழையவை