தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடிய தியாகத் தாயின் இறுதி நாள் நினைவேந்தல்!தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதியின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய (19)தினம் காலை, நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஆகவே அன்னை பூபதியின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் பங்குபற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.புதியது பழையவை