வாகன அணிவகுப்பின் போது இடம்பெற்ற விபத்து - இரு பாடசாலை மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!



பதுளையில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் Big match வாகன அணிவகுப்பின் போது இடம்பெற்ற விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 13 மாணவர்கள் இருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஜீப் ஒன்று கவிழ்ந்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01/04/2023) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மாணவர்களில் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


புதியது பழையவை