இந்தத் தேங்காய் சிதறியது போன்று எனது கணவனை கடத்தியவர்களும் சிதறுவார்கள் - சிரேஸ்ட ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவிகடந்த 2010 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட அக்கரைப்பற்று வீரமாகாளி அம்மன் கோயில் முன்னபாக இன்று (18)காலை 9.49 மணியலவில் தேங்காய் உடைத்து நேர்த்தி செய்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட இறுதியாக அக்கரைப்பற்றில் வைத்து தான் அவரது உயிர் பிரிந்ததாக அவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தனது கணவரை கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு காளியம்மாள் தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரியே இந்த நேர்த்தி கடனை செலுத்தியுள்ளார்.

கடந்த 13 வருடங்களாக தனது கணவனை தேடி அலைந்த சந்தியா இன்றைய தினம் தனது கணவனது சுவாசக் காற்று நின்றதாக கருதப்படும் அக்கறைப்பற்று மண்ணில் 13 தீபங்களை ஏற்றி தனது கணவனை கடத்தி காணாமால் ஆக்கியவர்களுக்கு காளியம்மாள் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் இந்த தேங்காய் சிதறுவது போன்று அவர்களும் சிதற வேண்டும் என்றும் சாபமிட்டுச் சென்றுள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இருந்த காலத்தில் கருணாவும், பிள்ளையானும் கூட்டு சேர்ந்து பிரகீத் எக்னலிகொடவை கொழும்பிலிருந்து கடத்தி, அக்கரைப்பற்றில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனது கணவனை இன்று வரை தேடி அலைகின்றார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் சுவிஸ் நாட்டில் வழங்கிய வாக்குமூலத்தின்படி பிள்ளையானால் கடத்தப்பட்டு எக்னலிகொட அக்கரைப்பற்றில் வெட்டிக் கொல்லப்பட்டார் என்ற வாக்குமூலங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

எது எவ்வாறாக இருந்தாலும் இன்று இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கல்விமான்கள் அரசியல்வாதிகள் என மகிந்த ராஜபக்ச காலத்தில் இருந்து இந்த துணைப் படைகள் மூலமாக பலரது உயிர்கள் இவ்வாறு காவு கொள்ளப்பட்டமை அனைவரும் அறிந்த ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது.


தான் ஒரு பெண் என்ற ரீதியில் தனது கணவனுக்காக இன்றுவரை போராடி ஆலயத்தில் சாபம் இட்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை