இலங்கை குரங்குகளை கோரும் அமெரிக்கா!சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கு இலங்கை அரசு பரிசீலனை செய்து வருகின்றது.

இலங்கையில் விவசாய நடவடிக்கைகளுக்கு பாரிய தொல்லைகளை குரங்குகள் வழங்குகின்றமையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், இந்த டோக் மக்காக் குரங்குகளை தமக்கும் வழங்குமாறு அமெரிக்கா கோரிக்கை முன்வைத்துள்ளது.

உலக அளவில் அழிந்து வரும் இனமாக டோக் மக்காக் குரங்குகள் உள்ளதுடன், இலங்கையில் வெகுவாக பெருகி எண்ணிக்கையில் 30 இலட்சத்தை கடந்துள்ளது.

இந்தநிலையில், அமெரிக்கா குறித்த குரங்குகளுக்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை