தொடருந்தில் சென்ற இளைஞன் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்தில் சென்ற இளைஞன் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி குமாரி தொடருந்தில் பயணித்த நபர் ஒருவர் காலி தொடருந்தில் நிலையத்தில் வைத்து கீழே விழுந்து இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கால்களை இழந்தவர் 25 வயதுடைய இளைஞனாகும். காலி தொடருந்தில் நிலையத்தை நெருங்கும் போது பயணிகள் நெரிசலில் சிக்கிய இளைஞன் தொடருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

25 வயதுடைய இளைஞனுக்கு நேர்ந்த கதி
இதனால் தொடருந்தில் இளைஞனின் கால்கள் சிக்கி இரண்டும் தனியாக பிரிந்து சென்றுள்ளன.

பின்னர் 1990 அம்பியுலன்ஸ் வண்டியில் அவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
புதியது பழையவை