கண்டி - அக்குறணையில் பள்ளிவாசலொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென வழங்கப்பட்ட தகவல் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குறித்த போலித் தகவலை வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் கண்டி - ஹாரிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை பொது மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.
அதன்படி அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு போலியான அல்லது ஏமாற்றும் விதத்தில் அழைப்புகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விடயம் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதுடன் மிக முக்கியமான அவசர நிலைமைகளில் கவனம் செலுத்துவதில் இருந்து அதிகாரிகளை திசைதிருப்பக்கூடுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.