மட்டக்களப்பில் நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் இடைநிறுத்தம்!மட்டக்களப்பு மாவட்டத்தில் கியு.ஆர் முறைமையைக் கடைப்பிடிக்காது எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான
எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாடாளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச்
சேர்ந்த நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உள்ளடங்குகின்றன.


மஞ்சந்தொடுவாயில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், சாரதிகள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

எதிர்காலத்தில் கியு.ஆர் முறைமை கடுமையாக்கப்படும் என்றும், கியு.ஆர் முறைமையை தவிர்ப்போருக்கு எரிபொருள் வழங்கப்படமாட்டது என அந்த
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை