மட்டக்களப்பு தாந்தாமலை உயிரிழந்த நிலையில் காட்டுயானை மீட்பு!மட்டக்களப்பு படுவாங்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டுயானை மீட்கப்பட்டுள்ளதாக, வன ஜீவராசிகள் பாதுகாப்பு சுற்றுவட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா வீட்டுத்திட்டத்திற்கு அருகே, நீர் நிலை ஒன்றிலிருந்தே காட்டுயானை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யானை சுமார் 10 தொடக்கம் 15 வயது மதிக்கத்தக்கதாகும்.
நீதிமன்ற உத்ததவு கிடைக்கப்பெற்றதும் பிரேத பரிசோதனையின் பின்னரே இந்த யானையின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு
சுற்றுவட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.

படுவாங்கரைப் பிரதேசத்திற்குப்பட்ட பல பகுதிகளிலும் மிக நீண்டகாலமாக காட்டுயானைகளின் அட்டகாசங்களும். தொல்லைகளும், அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை