மட்டு - ஏறாவூரில் அகற்றப்பட்ட புன்னைக்குடா வீதி பெயர்ப்பலகை மீள நடப்பட்டதுமட்டக்களப்பு ஏறாவூரில் அகற்றப்பட்ட புன்னைக்குடா வீதி பெயர்ப்பலகை மீள நடப்பட்டது!கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் உத்தரவின் பேரில் ‘எல்மிஸ் வல்கம’ வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்காக அகற்றப்பட்ட புன்னைக்குடா வீதி எனும் பெயர்ப்பலகை அதே ‘புன்னைக்குடா வீதி’ என்ற பழைய நாமத்தோடு அமைச்சர் நஸீர் அஹமட்டினால் மீள நடப்பட்டது.

இந்நிகழ்வு கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர புன்னைக்குடா வீதி சந்தியில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை