மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த ஆலய குருக்கலின் கையடக்க தொலைபேசி, 35 ஆயிரம் ரூபா பணம் மற்றும் திறப்பு கோர்வை என்பன நேற்று(08.04.2023) காலையில் இளைஞன் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயத்தில் வழமைபோன்று ஆலைய குருக்கள் பூஜை செய்வதற்காக சம்பவதினமான அன்று காலை 6 மணிக்கு சென்று தனது கையடக்க தொலைபேசி மற்றும் தாம் வைத்திருந்த 35 ஆயிரம் ரூபா பணம் ஆலைய சாவிக்கோவை கியூபார் அட்டை, அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் என்பற்றை வைத்துவிட்டு பூஜை வழிபாட்டிற்கு சென்றுள்ளார்.
பூஜையை முடித்துவிட்டு 7 மணியளவில் அறைக்கு சென்றபோது அங்கு வைத்திருந்த பொருட்கள் திருட்டுபோயுள்ளது.
இதனையடுத்து ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை பார்த்தபோது அதில் இளைஞர் ஒருவர் முகத்தை மறைக்க முககவசம் அணிந்தவாறு அறையினுள் சென்று அங்கிருந்த பொருட்களை திருடிக் கொண்டு செல்வது பதிவாகியுள்ளது.
பொதுமக்களிடம் கோரிக்கை
இதனை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.