காட்டு யானைகளுடன் மோதியதில் - புகையிரதம் தடம்புரள்வு!



திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு நேர அதிவேக புகையிரதம் தடம்புரண்டுள்ளது.

நேற்று (08) இரவு இலக்கம் 7084 பலுகஸ்வெவ புகையிரத நிலையத்திற்கு அருகில் மூன்று காட்டு யானைகளுடன் மோதியதில் யானைகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

இதற்கு முன்னதாகவும் திருகோணமலையில் கடந்த 7 ஆம் திகதி புகையிரதம் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டிருந்த நிலையில்,  மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.



புதியது பழையவை