இந்து இளைஞனை மணந்த இஸ்லாமிய யுவதி!கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய யுவதி ஒருவர் இந்து மத இளைஞரை திருமணம் செய்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இரு வீட்டாரின் சம்மதம்
இரு வீட்டாரின் சம்மதத்துடன் வந்தாறுமமூலை ஆலயத்தில் தம்பதிகளின் திருமணம் மிக கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

ஏறாவூரை சேர்ந்த பாத்திமா அப்ஸா எனும் யுவதியே இவ்வாறு இந்து மத்திற்கு மாறி வந்தாறுமூலையை சேர்ந்த கந்தசாமி முருகன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு பௌத்த துறவி ஒருவரும் கலந்து கொண்டு ஆசிகளை வழங்கியுள்ளார். மூவின நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக இத்திருமணம் அமைத்துள்ளது.

இந்நிலையில் தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில், மண மக்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.


புதியது பழையவை