மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் பணிப்பாளர் செ.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது.

நேற்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் உயர் தொழில்நுட்ப கல்லூரியின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர்.

சமூக விழுமிய செயற்பாடு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக மட்டக்களப்பு உயர்தொழில்நுட்ப கல்லூரியின் சமூக விழுமிய செயற்பாடொன்றாக குறித்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான வைத்தியர் குழாம் குறித்த நிகழ்வுக்கு வருகைதந்து குருதிகளை சேகரித்துக் கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.


இந்நிகழ்வில் சிவில் சமூக அமைப்பின் முன்னாள் தலைவர் கலாநிதி K.பிரேமகுமார் மற்றும் சிவில் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு குருதி கொடையாளர்களை உட்சாகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை