மட்டு - வெல்லாவெளியில் இரண்டரை வயது குழந்தை மீது தாக்குதல் - தமிழரசு கட்சி உறுப்பினர் கைது!



மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினா மற்றும் அவரது குழந்தை மீத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் தமிழரசு கட்சியின் இணைப்பாளர் ஒருவரால் இன்றைய (27-04-2023)தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மட்டக்களப்பு,வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது இரண்டரை வயது மகள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்த தாக்குதலை தமிழரசுக்கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் பிரதீப்குமார் என்பவர் மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று பகல் வெல்லாவெளி கலைமகள் பாடசாலைக்கு முன்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கோபாலன் பிரசாத் மற்றும் அவரது பெண் குழந்தை, மனைவி என மூவரும் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்யும் போதே வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



இதன்போதே பிரசாத்தின் இரண்டரை வயது பெண் குழந்தை படுகாயமடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


இது தொடர்பில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் தமிழரசி கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் பிரதீப்குமார் என்பவர் வெல்லாவெளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேச சபை சார்பாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை