மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு!



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு, 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள்
வழங்கி வைக்கப்பட்டன.

மருந்துகளின் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வாழும் தமிழ் மக்களால்
நன்கொடையாக வழங்கப்பட்டன.

கனடியத் தமிழர் பேரவையின் உறுப்பினர் துரைரட்ணம் துஸ்சந்தன் குறித்த மருந்து பொருட்களை
மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கலா ரஞ்சனி கணேஷ் லிங்கத்திடம்
கையளித்தார.

நிகழ்வில் மட்டக்காளப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கலா ரஞ்சனி கணேஷ் லிங்கம்,
போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை பணிமனை நிர்வாக உத்தியோகத்தர்கள்
என பலர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதி கனடியத் தமிழர் பேரவையின் 14வது ஆண்டினை முன்னிட்டு,வடக்கு,
கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு
மருத்துவ பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை