முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
குழந்தை யேசு கோயில் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.