நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான கடைகள் மூடப்படும்!


நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான கடைகள் நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபான கடைகள் மூடப்படவுள்ளது.

சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைக்கும் விசேட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலால் வரி குற்றங்கள் தொடர்பான தகவல்களை வழங்க 1913 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை