அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக், என்ற கடற்படை போக்குவரத்து கப்பல், நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
இது, அமெரிக்க கடற்படை கட்டளையின் விரைவுப் போக்குவரத்துக் கப்பல் ஆகும்.
துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள், உள்-திரையரங்கு மற்றும் போக்குவரத்தை வழங்கும் திறன் கொண்ட இந்த கப்பலில் 1200 கடல் மைல் தூரத்திற்கு 600 தொன் உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியும். இதன் சராசரி வேகம் மணிக்கு 25 கடல் மைல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.