உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு!



புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 714 ஆக குறைக்கப்படுகிறது என தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய தேசிய குழு, தமது அறிக்கையின் இரண்டாவது அலகை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் நேற்று கையளித்தது.

தற்போது 8 ஆயிரமாக உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்த அறிக்கை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை