கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய பளை பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு்ள்ளார்.
பளை - தோட்டக்காணி ஒன்றிலிருந்தே இன்றைய தினம் (02-04-2023) சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
நேற்றைய தினம் (01-04-2023) பெரியபளையில் வசித்து வந்த கணபதிபிள்ளை முருகேசம்பிள்ளை என்பவர் காணாமல் போன நிலையில் இன்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.