வித்தகபுரம் விடியல் மக்கள் முன்னேற்ற கழகத்தின் 2ஆவது ஆண்டு நிறைவு விழா!



விடியல் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சுதாகரன் தலைமையில்(04-05-2023) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டம் வலி வடக்கு பிரதேசசெயலக வித்தகபுரம் கிராமத்தில் ஶ்ரீ கற்ப்பக விநாயகர் ஆலயம்  (லண்டன்) வோல் தம்ஸ்றோ ஸ்தாபகர் மு.கோபாலகிருஸ்ணன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் இடம்பெற்றன.

நிகழ்வின் அதிதிகளாக தமிழரசுக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் - சிறிதரன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான திரு  மாவை .சேனாதிராஜா 
இலங்கைக்கான அகிலன் பவுண்டேசன் இணைப்பாளர் கலாநிதி வீ.ஆர்.மகேந்திரன் ஜே.பி அவர்களின் பங்கு பற்றலுடன்
விடியல் மக்கள் முன்னேற்ற களக மாலை நேர கல்வி நிலையம் ஆரம்பித்ததுடன்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்ளும் வழங்கி வைக்கப்பட்டன.


நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் :-

இலங்கையில் போதைவஸ்து பாவனையினால் மாணவ சமூகமும் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாகவும் மாகாணம் வடக்கு கானப்படுகின்றனர் போதைவஸ்தால் சிறுவர் துஸ்பிரயோகங்கள் கொலை களவு போன்றன இடம் பெறுகின்றன  இதற்கு காரனம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மீன்பிடி படகுகள் மூலம் உயிர்கொல்லி போதைப்பொருட்களை கொண்டு வந்து தமிழர் பகுதியில் பரப்பி நாசம் செய்கின்றார்கள் இந்த காலகட்டத்திலும் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 
சிறி கற்ப்பக விநாயகர் ஆலயம்  (லண்டன்) வோல் தம்ஸ்றோ ஸ்தாபகர் மு.கோபாலகிருஸ்ணன் அவர்கள் இலங்கையில் பலபாகங்ளிலும் தனது பணி செய்துவருகின்றமை மிகப்பெரும் சேவையாகும் என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு மாணவர்களினால் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றனர்.

புதியது பழையவை