மட்டக்களப்பில் உலக பொது சுகாதார மருத்துவ மாதுக்கள் தினம் கொண்டாடப்பட்டது.
மாவட்டத்தின் 14 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கடமையாற்றும், பொது சுகாதார மருத்துவ மாதுக்களை கௌரவிக்கும் வகையில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி சுகுணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வைத்திய அதிகாரிகள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 24 வருடங்களாக பொது சுகாதார மருத்துவ மாதுக்களாக கடமையாற்றிய மருத்துவ மாதுக்களுக்கு விருதுகள் வழங்கி அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டதுடன், சிரேஷ்ட வைத்தியர்களுக்கு பொன்னாடை போர்த்தி பொது சுகாதார மாதுக்களினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
