22 பாம்புகளுடன் விமான நிலையத்தில் கைதான பெண் ஒருவர் கைது!பல்வேறு வகையான 22 பாம்புகளுடன் பெண் ஒருவரை சென்னை விமான நிலையத்தில் இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஏ.கே.13 விமானம் மூலம் கோலாலம்பூரில் இருந்து ஏப்ரல் 28ஆம் திகதி சென்னை விமான நிலையத்துக்கு அந்தப் பெண் வந்தார். சந்தேகத்தின் அடிப்படையில் அவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.


"அவர் கொண்டு வந்த பொதிகளை ஆய்வு செய்ததில், ஒரு பச்சோந்தியுடன் பல்வேறு வகையான 22 பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஊர்வன சுங்கச் சட்டத்தின் கீழ், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்," என்று ஒரு அதிகாரி கூறினார்.

அந்த பெண் சனிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார், அவரை 14 நாள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
புதியது பழையவை