மட்டக்களப்பில் தரிசனம்விழிப்புலனற்றோர் பாடசாலையின் 31வது ஆண்டு விழா!



மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 31வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. 

மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை பகுதியில் 1992ம்ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, விழிப்புலனற்ற பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக இரண்டு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு 31 ஆண்டுகளுக்குள் 37 பட்டதாரிகளையும் 25 பட்டதாரி அரச உத்தியோகத்தர்களையும் தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை உருவாக்கியுள்ளது.

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 31வது ஆண்டு விழா இன்று
பாடசாலையின் ஸ்தாபகரும், தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் நிர்வாக
குழுவின் தலைவருமான நாகராஜா இதயராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் கலந்து கொண்டார்.

நிகழ்வில் பல்கலைக்கழ முதுமாணி பட்டம் பெற்ற மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுப் பணிப்பாளர் லிங்கேஸ்வரன் ,சமூக சேவை உத்தியோகத்தர்
ராஜ்மோகன், தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் நிர்வாக குழு உறுப்பினர்கள் ,விழிப்புலனற்றோர் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் 31வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை