வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17-05-2023) நியமிக்கப்படவுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, மேல், வட மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாண ஆளுநர்களைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
3 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள்
இந்த நிலையில், 3 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
அதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வட மேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோர் கடந்த 15 ஆம் திகதி பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.