கிழக்கின் புதிய ஆளுநர் நாளை திருமலைக்கு விஜயம்!



கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று(17-05-2023) நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் நாளை காலை (18) திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவ்வாறு விஜயம் செய்யும் ஆளுநர், நாளை காலை 9.00 மணியிலிருந்து திருகோணமலையிலுள்ள சகல மதஸ்தளங்களுக்கும் விஜயம் செய்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மத வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளார். 

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (19) காலை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை