மதகுடன் மோதி தூக்கி வீசப்பட்ட நபர்!



யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த நபர், தனது தோட்டத்தில் காவலுக்காக செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து மோட்டார்சைக்கிளில் வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் அம்பன் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக மதகுடன் மோதி படுகாயமடைந்து பாலம் ஒன்றினுள் வீசப்பட்டுள்ளார்.

இரவு வேளையாக இருந்ததால் விபத்துக்குள்ளான நிலையிலேயே அதிக நேரம் காணப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தற்செயலாக அவரை அவதானித்த இளைஞர் ஒருவர் உடனடியாக நோயாளர்காவு வண்டிக்கு அறிவித்துள்ள நிலையில் அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புதியது பழையவை