கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவர் - விசேட அதிரடிப்படையினரால் கைது!அம்பாறை பொத்துவிலில் 2 கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் ஹலாம் வீதியில்
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்பில், அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய, அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

37 மற்றும் 60 வயதுடைய இரு சந்தேக நபர்களிடமிருந்து, கஜமுத்துக்கள்;, சான்று பொருட்கள் என்பன பொத்துவில்
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை