நேற்று மக்கள் வங்கி கொடுத்த சில நிறுவனங்கள் பெற்ற கடனை பில்லியன் கணக்கில் தள்ளுபடி செய்து விட்டு
இன்று அரசாங்க அலுவலர்களும் சாதாரண மக்களும் பெற்ற கடனுக்கு வட்டி வீதத்தை அதிகரிக்க முடிவு எடுத்துள்ளதாக தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளது.
இவ் வங்கிகள் ஏன் இந்த நிலையில் சாதாரண மக்களை வதைக்கும் நடவடிக்கு செல்லுகிறது இது தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சி உறுப்பினர்கள் ஏன் கேள்வி எழுப்புவதில்லை.
உங்களால் இந்த நாட்டு மக்களுக்கு நல்லதைச் செய்ய முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் இப்படியான விடயங்களில் தலையிட்டு சாதாரண சாமானிய மக்களுக்கு உதவ முன்வாருங்கள் நாடாளுமன்றில் போய் பைத்தியம் பிடித்தது போல் கத்திக்கொண்டு இருக்காமல் இவ்வாறான விடயம் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான கேள்விகளை எழுப்பி ஒரு நல்ல மாற்றத்தை தேடித்தாருங்கள்.
மேலும் பத்திரிகை மற்றும் ஒளிஒலி ஊடகங்கள் அதில் கடமைபுரியும் ஊடகவியலாளர்கள் இது சம்பந்தப்பட்ட விடயங்களை தங்களது ஊடகங்களில் வெளிப்படுத்துவது இல்லை அதுவும் ஏன்? சிலவேளைகளில் இந்த தள்ளுபடி பெறும் நிறுவனங்கள் இந்த. ஊடகங்கள் சார்ந்து இருக்கும் நிலையும் இந்த நாட்டில் உள்ளது.
அரச வங்கிகள் என்று இந்த நாட்டில் சொல்லபடுகின்றவற்றில் மக்கள் வங்கி மேலிடம் மிக மோசமான ஒரு நடவடிக்கையை தனது சாதரண சாமானிய வாடிக்கையாளர்கள் மீது காட்டுவது எவ்வளவு பொறுத்தமான ஒன்று.
எனவே சாதாரண வாடிக்கையாளர்களின் தற்போது உள்ள வட்டிவீத்தை நீங்கள் அதிகரித்து பெரும் கொழுத்த முதலைகள் என்று சொல்லும் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது எந்தவிதத்தில் ஞாயமானது என்பது எனக்கு விளங்கவில்லை.
இது தொடர்பாக மிக விரைவில் சாதாரண சாமானிய வங்கி வாடிக்கையாளர்களை கொண்ட சங்கம் ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் அதன் மூலம் எமது எதிர்ப்பை இப்படிப்பட்ட வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
நட்புடன்.
GJ.பிரகாஷ்
முன்னாள் நகரசபை உறுப்பினர்
திருகோணமலை.