திருமலையில் குறித்த நிகழ்வு இரத்து இனவாதிகளுக்கு யாரும் தீனிபோட வேண்டாம்!

தாய்லாந்தில் இருந்து வரும் குழுவினரால் நாளை (14.05.2023 ) திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் பிரித் நிகழ்வு ஒன்று ஏற்பாடாகி இருந்தது. 

(சிலை வைக்கும் எந்த திட்டமும் அதில் இருக்கவில்லை) அந்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் பலருடைய வேண்டுகோள்களுக்கு அமையவும் இன நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையிலும் நேற்றைய தினம் (12) இந்த முடிவு தாய்லாந்து தூதரகத்தினால் எடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் குறித்த இடத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய பாதயாத்திரை  இடம்பெறவுள்ளதாகவும் கச்சேரி மட்டத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

எனவே இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையிலும், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் எவரும் செயற்பட வேண்டாம் என கேட்டக் கொள்ளப்படுகின்றீர்கள்.
புதியது பழையவை