மட்டக்களப்பில் அரச பேருந்து மோதி இளைஞரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் அரச பேருந்து மோதியதில் 23 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றையதினம் (20.05.2023) பதிவாகியுள்ளது.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த பேருந்து கிரான்குளம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இளைஞன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதனையடுத்து இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
புதியது பழையவை