கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் (25.05.2023) தோட்ட உட்கட்டமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள நீர்விநியோக பிரச்சினையை சரிசெய்யவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தண்ணீர் குழாய்களை வழங்கவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
நீர்விநியோக பிரச்சினை
மேலும், உள்ளூராட்சி மன்றத்தின் ஊடாக நீர்குழாய்கள் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ்வரன், ஆளுநரின் செயலாளர், மாகாண பிற அமைச்சக அதிகாரிகளும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.