270 ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்தில் இருந்து திருகோணமலைக்கு வந்து இறங்கியதாக கூறப்படும் பௌத்த தேர்களை நினைவுகூரும் முகமாகவும், அவர்களை கௌரவப்படுத்தும் முகமாகவும் அவர்கள் வந்து இறங்கியதாக கூறப்படும் திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் குறித்த நிகழ்வு 14.05.2023 அன்று காலை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தாய்லாந்தில் இருந்து புத்தர் சிலையோடு வருகை தருகின்ற 50 பௌத்த தேரர்கள் பங்குகொள்ளவுள்ளனர்.
திருகோணமலையில் 14.05.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிகழ்வு தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல்கள் 08.05.2023 மற்றும் 10.05.2023 ஆகிய தினங்களில் கச்சேரியில் இடப்பெற்றன அதன் பகுதியை இங்கு தருகின்றேன்.
வரலாறு:-
1753ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி தாய்லாந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த பௌத்த தேரர்கள் கோகண்ண என்று அழைக்கப்படுகின்ற திருகோணமலையின் நெல்சன் திரையரங்கிற்கு முன் இடம் பெறும்
