மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் இரத்ததான முகாம்



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ‘உதிரமீந்து உயிர்காப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம்(02-05-2023) இரத்ததான முகாம் இடம்பெற்றது.

போரதீவுப்பற்று இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையுடன் இந் நிகழ்வு நடைபெற்றது. போரதீவுப்பற்று பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இரத்தான நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் தலைவர் மு.விமலநாதன் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் உட்பட பலர்
கலந்துகொண்டனர்.

போரதீவுப்பற்று இளைஞர் கழக சம்மேளன இளைஞர் யுவதிகள், போரதீவுப்பற்று பிரதேசசபை உத்தியோகஸ்தர் ஊழியர்கள்,பிரதேசசெயலக உதவிப் பிரதேசசெயலாளர்,உத்தியோகஸ்தர்கள், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை அதிகாரிகள், வெல்லாவெளி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட ஏனைய திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்து கொன்டு இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





புதியது பழையவை