அறைகளை வாடகைக்கு விடும் போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு அதன் முகாமையாளரும் பாலுறவு தொழிலில் ஈடுபடவிருந்த பெண் ஒருவரும் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக காலி காவல்துறையினர் தெரிவித்தனர்.
காலி பெட்டிகல வத்த குறுக்கு வீதியிலுள்ள விபசார விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 21 வயதுடைய பெண் மாத்தறை பிரதேசத்தை வசிப்பவர் எனவும் அவர் வீட்டில் இருந்து வந்து பிலானையில் உள்ள வீடொன்றில் தங்கி நின்று குறித்த விடுதிக்கு வந்து செல்வது தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காலி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சதீஸ் கமகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இலஞ்ச ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் எம். நிமல் சார்ஜன்ட் மதநாயக்க (14353) மற்றும் பெண் உப காவல்துறை பரிசோதகர் ஸ்ரீயானி ஆகியோர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
