இலங்கையில் குளவி தாக்குதல்கள் தொடர்பாக உள்நாட்டைக் கடந்த தற்போது வெளிநாட்டிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த வெளிநாட்டவர்கள் குளவித்தாக்குதலால் பாதிக்கப்பட்ட செய்தி வெளிநாட்டு ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் குறிப்பாக மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உரியமுறையில் பராமரிக்கப்படாமைக் காரணமாகக் குளவிகள் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட தொழிலாளர்கள்
இந்தநிலையில் வெளிநாட்டுப் பயணிகள் இருவர் குளவிகளால் தாக்குதலுக்கு உள்ளான புகைப்படங்கள் வெளிநாட்டு ஊடகங்களில் முன்னிலைப்படுத்திப் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாள்தோறும் குளவித்தாக்குதலால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.