நூற்றுக்கணக்கான மடிக்கணினிகளுடன் முன்னாள் அமைச்சர் - ரஞ்சன் ராமநாயக்க





நூற்றுக்கணக்கான மடிக்கணினிகளுடன் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (12.05.2023) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

ஆதரவாளர்களின் நன்கொடை
சிங்கப்பூர், அபுதாபி மற்றும் டுபாயில் உள்ள ஆதரவாளர்களால் மொத்தம் 250 மடிக்கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

குறித்த புதிய மடிக்கணினிகளை ரஞ்சன் ராமநாயக்க இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.


இதன்போது ரஞ்சன் கூறுகையில், மடிக்கணினிகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு வரிச்சலுகைகளை வழங்கிய இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நன்கொடைகளில் ஈடுபட்ட நபர்களுக்கும் அவர் தனது நன்றியை கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் மடிக்கணினிகள்
இதேவேளை எதிர்காலத்தில் சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து மேலதிகமாக 10,000 மடிக்கணினிகள் பெறப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும், க .பொ.த சாதாரண தரப் பரீட்சையில் உயர் புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும், தகவல் தொழிநுட்பப் பிரிவில் படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இம்மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியது பழையவை