ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!



ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை (09.05.2023)  ஏற்பட்ட நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன்,  120 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயிரிழப்புகள் எதுவும் இதுவரை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னதாக கடந்த (3.05.2023) அன்று, ரிக்டர் அளவுகோலில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானை உலுக்கியதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை