இந்திய நடிகர் சரத்பாபு நேற்று(03) தினம் மாலை மரணமடைந்தார் என பரவிய செய்தி தொடர்பில் குடும்பத்தினர் தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ரஜினியுடன் அண்ணாமலை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கும் சரத்பாபு கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார்.
செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட அவரது உடலின் உள் உறுப்புக்கள் செயலிழந்ததால் கடந்த சில வாரங்களாக வென்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து இருப்பதாக சற்றுமுன்னர் செய்தி தீயாய் பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி தான் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
ஆனால் இது உண்மையில்லை என சரத் பாபுவின் குடும்பத்தினர் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவித்து இருக்கின்றனர.