மட்டக்களப்பில் கடலில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு!



மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் இன்று (07-05-2023)நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பிரத்தியேக வகுப்பு ஒன்றிற்கு செல்வதாக வீட்டிலிருந்து சென்ற மாணவர்கள் இருவரே இன்று காலை மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றுவிக்க உள்ள மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொக்குவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை