கிழக்கு மாகாண கடற்கரை சுத்திகரிப்பு!கிழக்கு மாகாண கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சி திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (27.05.2023) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் கடற்கரைகளை ஆசிய கண்டத்தின் அழகான மற்றும் தூய்மையானதோர் கடற்கரைகளாக மாற்றுதல் எனும் திட்டத்தின் கீழ் திருகோணமலை பட்டினமும் சூழலும் எனும் தொனிப்பொருளில் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அரச அலுவலக பிரதானிகள்
இந்த திட்டத்தினை மாபெரும் சிரமதான பணியாக திருகோணமலை பிரதேச சபை ஏற்பாடு செய்துள்ளது.

இச்சிரமதான பணியில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மாகாணத்தைச் சேர்ந்த அரச அலுவலகங்களின் பிரதானிகள் கலந்து கொண்டுள்ளனர்.


புதியது பழையவை