கறுப்பு பட்டியலுக்குள் செல்லவுள்ள இலங்கை



இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கறுப்பு பட்டியலுக்குள் உள்ளடக்கப்படும் நிலை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முறையற்ற மீள் ஏற்றுமதி நடவடிக்கையே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(26) விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,


“இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்த்துக்கு அமைய இலங்கையில் இருந்து இந்திய சந்தைக்கு சுமார் 4000 பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதனுடாக தேசிய உற்பத்தியாளர்கள் பயனடைவதோடு, இந்தோனேசியாவில் இருந்து உலர்ந்த பாக்கு இறக்குமதி செய்யப்பட்டு அவை இலங்கை ஊடாக இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த மீள் ஏற்றுமதியின் போது பெறுமதி சேர் வரி ஊடான வருமானம் முறையாக கிடைக்கப் பெறுகிறதா ? இதனால் தேசிய உற்பத்தி ஏற்றுமதியாளர்களும் முறையான ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளினால் இலங்கை - இந்திய வர்த்தக ஒப்பந்தம் கறுப்பு பட்டியலில் சேரும் நிலை காணப்படுகிறது” என்றார்
புதியது பழையவை