யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு!திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (29.05.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த உக்குபண்டாகே ஜயரத்ன (64வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை